தேமுதிகவில் பதவி.! அரசியல் மேடை ஏறுகிறார் விஜகாந்த் மகன்.!

தேமுதிகவின் தலைவர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய்பிரபாகரன் தனது முதல் அரசியல் மேடை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேச உள்ளார்.

தமிழகம் முழுவதும் தேமுதிகவின் 14-வது ஆண்டு விழா மற்றும் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது.

இன்று காஞ்சிபுரம் மாவட்டம் அனகாபுத்தூர் அம்மன் கோயில் திடலில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் விஜகாந்த்தின் மகன் விஜய்பிரபாகரன் கலந்துகொள்ள உள்ளார்.

இது அவருக்கு முதல் அரசியல் மேடை என்பதால், மேடையில் எப்படி பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு உருவாகி உள்ளது.

இந்த நிகழ்ச்சி குறித்து மூத்த நிர்வாகிகள் சிலர் தெரிவிக்கையில், ”தனது மூத்த மகனான விஜய் பிரபாகரனை அரசியலில் ஈடுபடுத்த வேண்டும் என தலைவர் விஜயகாந்த் விரும்புகிறார்.

இதுவே நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் விருப்பமாகவும் உள்ளது. கட்சியில் அவருக்கு பதவி உடனே பதிவு கொடுத்தால், அது பெரும் சர்ச்சையாகும், எனவே படிப்படியாக அரசியலில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளார்” என்று தெரிவித்துள்ளனர்.