தற்கொலை செய்து கொள்ள எதற்காக முடிவு செய்தேன்! – சின்னத்திரை நடிகை நிலானி பேட்டி

காதலன் லலித்குமார் இறந்து போனதையடுத்து சின்னத்திரை நடிகை நிலானி மீது பல்வேறு அவதூறுகள் எழுந்ததையடுத்து தற்கொலை முயற்சி மேற்கொண்டார்.

நிலானியை திருமணம் செய்ய விரும்பிய உதவி இயக்குநர் காந்தி லலித்குமார், கடந்த மாதம் கே.கே நகர் பகுதியில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

இவரது இறப்பிற்கு பிறகு, நிலானி மற்றும் லலித் குறித்த நெருங்கமான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகின.

இது தொடர்பாக, கே.கே நகர் பொலிசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி மேற்கொண்ட நிலானி தற்போது நலமாக இருக்கிறார்.

எதற்காக தற்கொலை செய்ய முடிவு எடுத்தேன் என்பது குறித்து நடிகை நிலானி கூறியதாவது,

காந்தி லலித்குமார் உயிருடன் இருக்கும்போது பார்த்துட்டு வந்து பயங்கர மனஅழுத்தத்துல இருந்தேன்.

மறுநாள், அவர் இறந்துட்டது தெரிஞ்சதும் எப்படி வருத்தப்படாம இருக்க முடியும்? என்னால சாப்பிட முடியல; தூங்க முடியலை. அவர் இறந்த அதிர்ச்சியிலிருந்து வெளிவரவே முடியலை.

அப்போ, சமூக வலைதளங்களில் என்னை அசிங்க அசிங்கமா சித்திரிக்க ஆரம்பிச்சாங்க. அது இன்னும் மன வேதனையைக் கொடுத்துச்சு. ஆதங்கத்துல தற்கொலை பண்ணிக்க முடிவெடுத்தேன்.

என் குழந்தைகள் பற்றியும் யோசிக்காமல் சட்டென ஒரு ஆவேசத்துல வீட்டிலிருந்த கொசு மருந்தைக் குடிச்சுட்டேன் என கூறியுள்ளார்.