உடனடியாக வட மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும்….மாகாண சபை உறுப்பினர்கள் வலியுறுத்தல்….

மாகா­ண­ச­பைத் தேர்­தலை உட­ன­டி­யாக நடத்­த­வேண்­டும் என்று வடக்கு மாகாண சபை­யில் நேற்­றுக் கோரிக்கை விடுக்­கப்­பட்­டது. மஹிந்த அணி மாகா­ண­சபை உறுப்­பி­னர், தர்­ம­பால சென­ வி­ரட்ன சபை­யில் இந்­தக் கோரிக்­கையை முன்­வைத்­தார். சபை­யில் ஏனைய உறுப்­பி­னர்­க­ளும் அதற்கு ஆத­ரவு தெரி­வித்­த­னர்.

வடக்கு மாகாண சபை­யின் அமர்வு நேற்று இடம்­பெற்­றது. அமர்­வின் இறு­தி­யில் சபையை ஒக்­ரோ­பர் 23ஆம் திக­திக்கு ஒத்­தி­வைக்­கும் அறி­வித்­தலை அவைத் தலை­வர் விடுத்­தார். இதன்­போது கருத்­துத் தெரி­வித்த சென­வி­ரட்ன, நீங்­கள் மாகா­ண­ச­பைத் தேர்­தலை உடன் நடத்­தச் சொல்லி அரச தலை­வர் மைத்­தி­ரி­பா­ல­வி­டம் கோருங்­கள் – என்­றார்.

இதன் பின்­னர் கருத்­துத் தெரி­வித்த ஆளும் கட்சி உறுப்­பி­னர் அஸ்­மின், மாகா­ண­ச­பைத் தேர்­தல் நடத்­தப்­பட வேண்­டும். ஆனால் அதனை நடத்­தும் திராணி மைத்­தி­ரி­பா­ல­வுக்கு இல்லை. நல்­லாட்சி அரசு மீது தமிழ் மக்­கள் படிப்­ப­டி­யாக நம்­பிக்­கை­யி­ழந்து வரு­கின்­றார்­கள்.

இப்­ப­டிப்­பட்ட ஒரு­வ­ருக்கு ஆத­ரவு கோரி­யதை நினைத்து வெட்­கப்­ப­டு­கின்­றோம். சாட்­டுப் போக்கு சொல்லி காலம் கடத்­து­கின்­றார்.அவர் தனது கட்­சி­யைப் பாது­காக்­க­வேண்­டும் என்ற எண்­ணத்­தில் செயற்­பட்­டுக் கொண்­டி­ருக்­கின்­றார்.

அவ­ரின் பொரு­ளா­தா­ரக் கொள்­கை­கள் கார­ண­மா­கவே நாடு பாதா­ளத்­துக்­குப் போய்க் கொண்­டி­ருக்­கின்­றது.மேற்­கு­லக நாடு­கள் இலங்கை அர­சுக்கு பொரு­ளா­தார உதவி வழங்­கத் தயா­ராக இருந்­தன. தமி­ழர்­கள் விட­யத்­தில் அர­சின் போக்கு மாறி­ய­தும், மேற்­கு­லக நாடு­கள் இலங்­கைக்­கான உத­வியை நிறுத்­தி­விட்­டன – என்­றார்.