பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், திடீரென சசிகலாவை சந்தித்த டிடிவி தினகரன்..!!
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகாலாவை இன்று நேரில் சந்தித்தார்.
சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று டிடிவி தினகரன், சசிகலாவை நேரில் சந்தித்து பேசினார். தற்போதைய அரசியல் சூழல், சட்டமன்ற உறுப்பினர் தகுதி நீக்க வழக்கு, நாடாளுமன்ற தேர்தல், அரசியலில் அடுத்தகட்ட நகர்வு ஆகியவற்றை குறித்து இருவரும் பேசிக்கொண்டதாக கூறப்படுகிறது.