நயன்தாராவின் மகளாக இமைக்கா நொடிகள் படத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றவர் குழந்தை நட்சத்திரம் மானஸ்வி.
நயன்தாராவை கொடுமைப்படுத்த வரும் ஒரு போலீஸ்காரரிடம் மானஸ்வி ‘சொட்ட சொருகிடுவேன்’ என்று கூறும் வசனம் மிகவும் பிரபலமானது. காமெடி நடிகர் கொட்டாச்சியின் மகள் மானஸ்வி. இமைக்கா நொடிகள் படத்திற்கு பிறகு சதுரங்க வேட்டை 2 படத்தில் திரிஷாவின் மகளாக நடிக்கிறார்.
கும்கி 2, பரமபதம் விளையாட்டு, இருட்டு, சுட்டுப்பிடிக்க உத்தரவு உள்பட 20 படங்கள் மானஸ்வி கைவசம் இருக்கிறது. மகள் பற்றி கொட்டாச்சி தெரிவிக்கும்போது ‘அவள் சினிமா காட்சிகளை காப்பி செய்து நடித்த சில காட்சிகளை வீடியோவாக எடுத்து முகநூலில் பதிவிட்டேன்.
அதை பார்த்துவிட்டு தான் இமைக்கா நொடிகள் பட வாய்ப்பு வந்தது. நான் சின்னதாக காமெடியன் வேடங்களில் நடித்து வந்தேன். ஆனால் எனது மகள் பெரிய நடிகையாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அடிக்கடி நயன்தாரா மானஸ்வியுடன் பேசுவார். மானஸ்வி நயன்தாராவை அம்மா என்றுதான் அழைக்கிறார்’ என்றார்.






