கடந்த 16ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில், முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவரும், எம்.எல்.ஏ-வுமான நடிகர் கருணாஸ், ஆக்ரோசத்துடன் பேசினார்.
இதில் முதலமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதாக எம்.எல்.ஏ கருணாஸ் மீது 6 பிரிவுகளில் காவல்துறை வழக்குப்பதிவு, நடிகர் கருணாஸை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து இந்த வழக்கில் எம்எல்ஏ கருணாசுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. பின் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
இதனிடையே, முதல்வருக்கு எதிராக பேசியது தொடர்பாக எம்எல்ஏ ஒருவர், கருணாசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி சபாநாயகரிடம் மனு அளித்துள்ளார். இதையடுத்து கருணாஸ் விவகாரம் தொடர்பாக முதல்வரும், துணைமுதல்வரும் காலையில் சபாநாயகரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், சபாநாயகர் தனபாலுடன், சட்ட அமைச்சர் சண்முகம் ஆலோசனை நடத்தினர். பின் எம்எல்ஏ கருணாசுக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விரைவில் கருணாஸின் பதவியும் பறிபோகும் என மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது.






