தமிழக முன்னாள் அமைச்சரும், அரவக்குறிச்சி எம்.எல்.ஏவாக இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட செந்தில் பாலாஜி தற்போது டி.டி.வி.தினகரன் அணியில் உள்ளார்.
தினகரன் அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, நாங்கள் தினகரனுக்கு மட்டுமே கட்டுப்படுவோம். வேறு யாராலும் எங்களைக் கட்டுப்படுத்த முடியாது என்று கூறியிருக்கிறார்.
நாங்கள் அரசை கண்டித்து போராட்டம் நடத்த வேண்டுங்கள் விடுத்திருந்தோம் ஆனால் தைரியம் இல்லாத மாநில அரசு காவல்துறையிடம் எங்களுக்கு அனுமதி கொடுக்கவேண்டாம் என தடுத்திருக்கின்றனர் என்று பேசினார்.
இந்த நிலையில், பல கட்ட போராட்டத்திற்கு பிறகு மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி பெற்றனர்.
அரவங்குறிச்சி தொகுதிக்கு அதிமுக அரசு ஒன்றும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டத்தை முன்னெடுத்து செல்ல திட்டமிட்டனர்.
இதன் படி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை க.பரமத்தி கடைவீதியில் நடத்தினார். அ.ம.மு.க வைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதில் பேசிய எம்.ஜி.ஆர் அணியின் துணைச் செயலாளர் தியாகராஜன் என்பவர் அரவக்குறிச்சி தொகுதிக்கு எந்த நலத்திட்டங்களையும் செய்யாமல் இருப்பதாக தமிழக அரசை குற்றம்சாட்டிப் பேசினார்.
உண்ணாவிரதப்போராட்டத்தில் பேசி முடித்த கையோடு பேக்கரிக்குள் நுழைந்தார். சரி தண்ணீர் தான் குடிக்க வருவார் என்று ஊழியர்கள் நினைத்து கொண்டிருக்கையில், ஒரு வடையும், டீயும் உள்ளே தள்ளினார்.
அப்போதே இதுதான் உண்ணாவிரதம் போல என்பதை பேக்கரி ஊழியர்கள் உணர்ந்து கொண்டனர். இறுதியாக இவர் சாப்பிட்டு கொண்டிருந்த சமயத்தில் உண்ணா விரத போராட்டம் மிக சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது என அ.ம.மு.க நிர்வாகி பேசுகையில், பேக்கரிக்குள் சிரிப்லையை மட்டுமே காண முடிந்தது.






