ஜில்ஜில்லென குடிக்க சுவையான ஐஸ்கிறீம் தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள்:

மாம்பழம் (பெரியது) – 2
பால் – 1 கப்
வனிலா ஐஸ்கிரீம் – 1 கப்
ஜெலி– 2 மேசைக் கரண்டி

செய்முறை:

பாலை நன்றாக காய்ச்சி ஆறியதும் குளிர வைக்க வேண்டும். மாம்பழத்தை சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக வெட்டி, மிக்ஸியில் போட்டு கூலாக அடித்து கொள்ள வேண்டும்.தேவைக்கு ஏற்ப தண்ணீர் சேர்த்து அடித்தல் வேண்டும்.

பின்னர் குளிர வைத்த பாலுடன் ஜெலி சேர்த்து நன்கு அடித்து, மாம்பழ சாற்றுடன் சேர்த்து கலந்து கொள்ள  வேண்டும்.

பின்னர் அந்த கலவையை 2 மணி நேரம் குளிரூட்டியில் குளிர வைத்து நன்றாக குளிர்ந்ததும் வெளியில் எடுத்து, குறித்த கலவையின் மேல் வனிலா ஐஸ்கிறீம் ஊற்றி பரிமாறினால் சுவையாக இருக்கும்.