மதுப்பழக்கம் இரு மடங்கு அதிகரித்துள்ளது!

கடந்த 16 வருடங்களில் இந்தியரகளிடையே மது அருந்தும் பழக்கம் இரு மடங்காக அதிகரித்துள்ளது.

குடிப்பழக்கத்தினால் பல தீங்குகள் உண்டாவது யாவரும் அறிந்த்தே, ஆயினும் குடிப்பழக்கத்தை பலர் தொடர்ந்துக் கொண்டுள்ளனர். கடந்த 2016 ஆம் வருடம் குடியினால் 23 லட்சம் பேர் மரணம் அடைந்துள்ளனர். இதில் 7 லட்சம் பேர் பெண்கள் ஆகும். குடிப்பழக்கத்தினால் பல தொற்று நோய்கள் ஏற்படுவதும் ஏற்கனவே உள்ள நோய்கள் இந்த பழக்கத்தினால் குணமாகாமல் போவதும் இதற்கு முக்கிய காரணம் ஆகும்.

தற்போது வெளியாகி உள்ள ஒரு ஆய்வறிக்கையின்படி தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நாடுகளில் இந்தியாவில் அதிகம் பேருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இந்த பழக்கம் கடந்த 16 வருடங்களில் இருமடங்காக அதிகரித்துள்ளது. இது மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இவ்வகையில் இந்தோனேசியா மற்று தாய்லாந்து நாட்டிலும் விகிதாசார அடிப்படையில் மது அருந்தும் பழக்கம் அதிகரித்து வருகிறது.

இந்த 16 வருடங்களில் கடந்த 2005 ஆம் வருடம் வரை மது குடிப்பவர்கள் ஒவ்வொருவரும் சராசரியாக 2.4 லிட்டர் மது அருந்தி வந்தனர். ஆனால் தற்போது அது 5.7 லிட்டராக உயர்ந்துள்ளது. மது அருந்தும் பெண்களில் சராசரியாக ஒவ்வொரு பெண்ணும் 1.5 லிட்டர் மது அருந்துகின்றனர். இந்த கணக்கெடுப்பின்படி இன்னும் 16 ஆண்டுகளில் இந்த மது அருந்தும் பழக்கம் மேலும் இரு மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.