அந்த தகுதி உங்களுக்கும் கிடையாது.! ஸ்டாலின் மீது கடுமையான விமர்சனத்தை வைக்கும் தமிழிசை.!!

நேற்று காலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், ”நான் வைத்த ஊழல் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தங்கமணி அளித்துள்ள பதில் தெளிவாக இல்லை. இதற்காக அவர் என்மீது வழக்கு தொடருவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக குட்கா ஊழலை நான் தான் முதன் முதலில் வெளிக்கொண்டு வந்தேன். அப்போது, அமைச்சர் விஜயபாஸ்கர் என் மீது வழக்கு தொடர போவதாக தெரிவித்ததோடு சரி, இதுவரை என் மீது எந்த வழக்கும் தொடரவில்லை. மாறாக நான்தான் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது வழக்கு தொடர்ந்தேன்.

அதேபோல் தற்போது காற்றாலை மின்சார கொள்முதலில் நடந்த ஊழலுக்கான ஆதாரத்தை வெளியிட்டுள்ளேன். இதற்க்கு அமைச்சர் தங்கமணி என்மீது வழக்கு தொடரப்போவதாக கூறியுள்ளார். எனவே அமைச்சர் தங்கமணி என்மீது வழக்கு தொடர தயாரா?

நான் ஒருவாரம் வரை காத்திருக்கிறேன், அவர் என் மீது வழக்கு தொடரட்டும். இல்லையெனில் நான் அமைச்சர் தங்கமணி மீது வழக்கு தொடருவேன். அமைச்சர் தங்கமணி மீது நான் கூறிய புகார் ஆதாரப்பூர்வமானது” என்று ஆவேசமாக தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், ”ஊழல் பற்றி பேச மு.க. ஸ்டாலினுக்கோ, திமுகவுக்கோ எந்த தகுதியும் இல்லை” என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்துள்ளார்.

மேலும் அந்த பேட்டியில் அவர் தெரிவிதித்தாவது:- ஊழல் பற்றி பேச திமுகவுக்கோ – மு.க. ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை. தமிழகத்தில் ஊழலை விதைத்தவர்கள் திமுகவினர். விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்தவர்கள் திமுகவினர் என்று தமிழிசை சவுந்திரராஜன் கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார்.