ஒரு முறை மாரடைப்பு ஏற்பட்டால்!!

ஒரு முறை மாரடைப்பு ஏற்பட்டால் அவர்கள் தங்களின் ஆயுளில் ஒன்பதரை ஆண்டுகளை இழக்கிறார்கள் என்று அண்மைய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

தற்போது எம்மில் பலரும் வாழ்க்கை நடைமுறைமாற்றத்தை விரும்பியோ அல்லது விரும்பாமலோ ஏற்றுக்கொண்டிருக்கிறோம்.

நேரத்திற்கு சாப்பிடாதது, சத்துள்ளவற்றை போதிய அளவிற்கு சாப்பிடாதது. உடற்பயிற்சியோ அல்லது நடைபயிற்சியையோ நாளாந்தம் மேற்கொள்வது கிடையாது. அத்துடன் அதிக கலோரிகளைக் கொண்ட உணவுகளை விரும்பி சாப்பிடுகிறோம். அளவிற்குமேல் சாப்பிடுகிறோம். இதனால் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாகி, இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் கொழுப்பு தங்கி, இரத்தம் செல்ல வழியில்லாமல் மாரடைப்பு ஏற்படுகிறது.

மாரடைப்பை குணப்படுத்த பல்வேறு நவீன சிகிச்சை இருக்கிறது. ஆனால் மக்கள் மாரடைப்பிற்கு சிகிச்சைப் பெற்ற பின்னரும், அதாவது வைத்தியர்களாலும், வைத்திய தொழில்நுட்பத்தாலும் குணமடைந்த பின்னரும், வைத்தியர்கள் சொல்லும் வழிகாட்டலை பின்பற்றாமல் அலட்சியப்படுத்துகின்றனர்.

இதனால் அவர்களுக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்படுகிறது. பல தருணங்களில் அவர்கள் அபாயத்தையும் எதிர்கொள்கிறார்கள். ஒரு முறை மாரடைப்பு வந்துவிட்டாலே அவர்கள் தங்களின் ஆயுளில் ஒன்பதரை ஆண்டுகளை இழந்துவிடுகிறார்கள்.

இதனை உணர்ந்து மாரடைப்பு வராமல் தற்காத்துக் கொள்ளவேண்டும். குறைந்த பட்சம் வந்த பிறகாவது வைத்தியர்கள் சொல்லும் வழிமுறைகளை பின்பற்றி வாழ்க்கை நடைமுறையை மாற்றி ஆரோக்கியமாக வாழ வேண்டும்.

டொக்டர் ராஜேஷ்

தொகுப்பு அனுஷா.