நிலானிக்கு பல ஆண்களுடன் தொடர்பு! அந்தரங்க காணொளியை விரைவில் வெளியிடுவேன்? காந்தியின் சகோதரர்

நடிகை நிலானியைத் திருமணம் செய்ய விரும்பிய உதவி இயக்குநர் காந்தி என்கிற லலித்குமார், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுதொடர்பாக கே.கே.நகர் பொலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இதற்கிடையில் நடிகை நிலானி, உதவி இயக்குநர் காந்தி ஆகியோரின் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை நிலானி, காந்தி லலித் தன்னை திருமணம் செய்துக்கொள்ள முயற்சி செய்தார். அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்தது என்று ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டிருந்தார். இதனால் தான் அவரை நிராகரித்ததாகவும் கூறினார்.

இந்நிலையில், இது குறித்து காந்தியின் சகோதரர் கருத்து வெளியிட்டுள்ளார்.

இவருடைய மரணத்திற்கு முழு காரணம் நிலானி தான் என காந்தியின் சகோதரர் பேட்டி கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தன்னுடைய தம்பியின் மரணத்திற்கு முழு காரணம் நிலானி தான். என்னுடைய தம்பியின் மீது நிலானி தவறான புகார் கொடுத்ததால், காந்தி மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

தம்பியை நம்ப வைத்து கழுத்தை அறுத்து விட்டார். தற்போது வரை உண்மை நிலவரம் என்ன என யாருக்கும் தெரியவில்லை.

இப்போது தான் நாங்கள் உண்மையை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறோம். மேலும், நிலானிக்கு குடி பழக்கம் உள்ளது.

நிறைய ஆண்களுடன் தொடர்பும் உள்ளது விரைவில் இது குறித்து ஆதாரத்தை வெளியிடுவேன் என்றும் லலித் காந்தியின் சகோதரர் ரகுகுமார் குறிப்பிட்டுள்ளார்.