தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கும் நடிகர் அஜித்குமார் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பல நடிகர்,நடிகைகளுக்கும் மிக பெரிய முன்னோடியாக இருப்பவர்.
சினிமாவிற்கு வருவதற்கு முன்பு ஒரு மெக்கானிக்காக இருந்து பின் பல்வேறு முயற்சி மற்றும் தீராத கடின உழைப்பால் நடிகராக வெற்றி பெற்றார் .
மேலும் அஜித் சினிமா மட்டுமின்றி கார்-பைக் ரேஸ், சமையல், புகைப்படங்கள் எடுப்பது என பல துறைகளில் தன் கவனத்தை செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த தக்சா என்ற டிரோன் குழுவிற்கு அஜித் ஆலோசகராக பணிநியமிக்கப்பட்டார் .மேலும் அந்த குழு அஜித்தின் ஆலோசனையை பின்பற்றி தங்களது திறமையால் இந்திய அளவில் நடைபெற்ற கல்லூரிகளுக்கான டிரோன் போட்டியில் முதலிடம் பெற்றது.
இந்த நிலையில் தற்போது உலக அளவில் நடைபெறும் டிரோன் ஒலிம்பிக் என்ற போட்டி நடைபெறுகிறது.அதில் உலகளவில் மொத்தம் 13 குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில் இந்தியாவில் இருந்து அஜித்தின் தக்சா குழுவும் போட்டிக்கு தகுதி பெற்று தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக அஜித் மற்றும் தக்சா குழு ஆஸ்திரேலியா சென்றுள்ளனர்.இந்நிலையில் சர்வதேச அளவில் அஜித்தின் தக்சா குழு வெற்றிபெற ரசிகர்கள் மற்றும் பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.








