எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கைதிகளை தமிழக அரசு விடுவித்து வருகிறது. அதில் ஒரு கட்டமாக தற்போது 68 பேர் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.
ஆயில்தண்டனை பெற்று நீண்ட நாட்களாக சிறையில் இருக்கும் கைதிகளின் நன்னடத்தை பொறுத்து, தமிழக அரசு அவர்களை ரிலீஸ் செய்து வருகிறது.
இந்நிலையில், நன்னடத்தை காரணமாக மதுரை மத்திய சிறையில் இருந்து 68 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டனர். இந்த 68 கைதியை ஒருவர் பெண் கைதியாகும்.
இதுவரை 168 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சிறையில் இருந்து வெளிவந்த கைதிகளுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்து, இனிப்புகள் வழங்கியும் உறவினர்கள் வரவேற்றனர்.
இதையடுத்த நிருபர்களிடம் பேசிய அவர்கள், சிறையில், இந்தி நிகழ்ச்சிகளே பெரும்பாலும் ஒளிபரப்பப்படுவதாக குற்றம்சாட்டினர்.







