ரஜினிகாந்த் நடிக்கும் 2.O திரைப்படத்தின் டீசர்..!! வெளியாக போகும் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், ரஜினி,எமி ஜாக்சன் இணைந்து நடித்திருக்கும் படம் ‘2.0’. இந்த படத்தை 400 கோடி பட்ஜெட்டில் லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

இந்த ஆண்டு ஜனவரியில் ரிலீஸ் செய்யப்படும் என காத்திருந்த ரஜினி ரசிகர்களுக்கு வெறும் ஏமாற்றம் தான் கிடைத்தது.

2.0′ படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாத காரணத்தினால் படம் வெளியாகுவதில் சிக்கல் நீடித்து.

ஒரு வருடத்திற்கு மேலாக ரிலீஸ் தேதி தள்ளிப்போன நிலையில் 2.0 படம் வரும் நவம்பர் 29 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என படத்தின் இயக்குனர் ஷங்கர் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், 2.O திரைப்படத்தின் டீசர் வரும் 13-ம் தேதி வெளியிடப்படும் என லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.