“இவள் மனித இனம்தான்… தேவதையும்கூட”!! -(படங்கள்)

புகைப்படம் பேசுமா? பேசாது என்றுதான் இத்தனை காலம் நினைத்திருந்தோம். ஆனால் 4 பக்க சட்டங்களுக்குள் புகைப்படமான ஒரு சிறுமி கண்களால் பேச துவங்கி இருக்கிறாள்.

ஆம்! அவள் ஒரு நைஜீரிய சிறுமி. நான்கே வயதுதான் அவளுக்கு அவளது பெயர் ஜரே.

இவள் யார் என்று கேட்கிறீர்களா? இவள்தான் “உலகிலேயே அழகான சிறுமி” என்னும் பட்டத்தை பெற்றிருக்கிறாள்.

இவளது புகைப்படத்தை எடுத்தது மோபே என்னும் ஒரு பெண் புகைப்பட கலைஞர்.

அவரும் நைஜீரியாவை சேர்ந்தவர்தான். லாகோஸ் நகரத்தில் வசித்து வருகிறார்.

NINTCHDBPICT000423038846  "இவள் மனித இனம்தான்... தேவதையும்கூட"!! -(படங்கள்) NINTCHDBPICT000423038846

இந்த புகைப்படத்தை எடுத்து முடித்ததும், இன்ஸ்ட்டாகிராமில் உலவ விட்டார். கூடவே அந்த புகைப்படத்தில் “இவள் மனித இனம்தான்… தேவதையும்கூட” என்ற 2 வரிகளையும் சேர்த்து பதியவிட்டுள்ளார். சில நொடிகளிலேயே 10 ஆயிரம் லைக்ஸ்கள் வந்து குவிந்தன

மேலும் இந்த மோபே தன் பதிவில், ஜரேவை குழந்தை வயதில் இல்லாமலும், பருவ வயதில் இல்லாமலும் ஒரு இடைப்பட்ட காலத்தில் புகைப்படமாக எடுக்க விரும்பினேன்.

NINTCHDBPICT000423038855  "இவள் மனித இனம்தான்... தேவதையும்கூட"!! -(படங்கள்) NINTCHDBPICT000423038855

அவளை நான் செயற்கையாக சிரிக்க வைத்து படம் பிடிக்கவில்லை, அமைதியாக, இயல்பாக, ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாத அழகை மட்டும் பதிவு செய்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

உண்மைதான். இந்த புகைப்படத்தை பார்த்தால் ஜரே நம்முடன் பேசுவதை போலவே உள்ளது.

அதனால்தான் என்னவோ இன்ஸ்டாகிராமை சுற்றி வரும் அனைவருமே இந்த குட்டி தேவதையின் அழகுக்கு மயங்கி விழுந்து கொண்டிருக்கின்றனர்.

அத்துடன், உலகிலேயே அழகான சிறுமி என்றும் கூறி புளகாங்கிதம் அடைந்து வருகிறார்கள்.

NINTCHDBPICT000423038846  "இவள் மனித இனம்தான்... தேவதையும்கூட"!! -(படங்கள்) NINTCHDBPICT000423038846

மோனாலிசா ஓவியத்துக்கு பிறகு ஜரே-வின் புகைப்படம்தான் தற்போது அழகானதானவும், பேசும் புகைப்படமாகவும், மற்றவர்களை பேசவைக்கும் புகைப்படமாகவும் இன்ஸ்டாவில் தவழ்ந்து வருகிறது.

கண்ணுக்கு மை அழகு இந்த தேவதைக்கு கறுப்பு அழகு தேவதைகள் பிறப்பதில்லை பிறப்பவர்கள் எல்லாம் தேவதைகள் ஆவதில்லை ஜரே தேவதைகளின் தேவதை இவள்!