ஆபத்தான நிலையில் கலைஞர் கருணாநிதி! காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…!!

தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தற்போது மோசமடைந்துள்ளதாகவும், வைத்தியர்கள் தீவிரமாக சிகிச்சையளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் கோபாலபுரம் இல்லத்திற்கு விரைந்துள்ளதாகவும் தொண்டர்களும் வீட்டின் முன் குவிந்திருப்பதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்போது உயர் மருத்துவ சிகிச்சைக்காக காவேரி வைத்தியசாலைக்கு கருணாநிதி அவசரமாக அழைத்து செல்லப்பட்டுள்ளதாக அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கருணாநிதிக்கு நேற்று திடீர் சுகயீனம் ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து வைத்தியர்கள் அவருக்கு தீவிர சிகிச்சையளித்து வந்தனர். இந்நிலையில், அவரின் உடல்நிலை முன்னேற்றமடைந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது கருணாநிதியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து, முக்கிய அரசியல் தலைவர்கள் கோபாலபுரம் இல்லத்திற்கு விரைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தி.மு.க தொண்டர்களும் வீட்டிற்கு முன் கூடியிருப்பதாக தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.