தன்னை விட 10 வயது குறைவான காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்: அமெரிக்க ஊடகம் தகவல்

பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவுக்கும் அவருடைய காதலரும் பாப் பாடகருமான 25 வயது நிக் ஜோனாஸுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஜூலை 18 அன்று லண்டனில் 36 வயது பிரியங்கா சோப்ராவின் பிறந்தநாளன்று இந்த நிகழ்வு நடைபெற்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

2017-ம் ஆண்டு ஒரு நிகழ்ச்சிக்கு பிரியங்காவும் நிக் ஜோனாஸும் ஒன்றாக வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதன்பிறகு பல இடங்களில் இருவரும் ஒன்றாகச் சுற்றுவது குறித்து அமெரிக்க ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இதையடுத்து நிச்சயதார்த்தம் குறித்த இந்தச் செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த ஜூன் மாதம், நியூ ஜெர்ஸியில் ஜோனாஸின் பெற்றோரைச் சந்தித்தார் பிரியங்கா சோப்ரா.

சில வாரங்கள் கழித்து இந்தியாவுக்கு வந்த ஜோனாஸ், பிரியங்காவின் பெற்றோரை நேரில் சந்தித்தார். எனினும் இந்த நிச்சயதார்த்தச் செய்திகள் குறித்து இருவரும் இதுவரை வெளிப்படையாகக் கருத்து எதுவும் சொல்லவில்லை.

பே வாட்ச் என்கிற ஹாலிவுட் படம் மற்றும் குவாண்டிகோ என்கிற ஆங்கில தொலைக்காட்சித் தொடர் போன்றவற்றில் நடித்து சர்வதேச நடிகையாக உயர்ந்துள்ள பாலிவுட் நட்சத்திரம் பிரியங்கா சோப்ரா, அதிக வருமானம் ஈட்டிய தொலைக்காட்சி நடிகைகளில் ஒருவராகக் குறிப்பிடப்பட்டார்.

கடந்த வருடம் ஃபோர்ப்ஸ் வெளியிட்ட பட்டியலில், உலகளவில் அதிக வருமானம் ஈட்டிய தொலைக்காட்சி நடிகைகளில், பிரியங்கா சோப்ராவுக்கு 8-வது இடம் கிடைத்தது.

gettyimages-180681948-1532712824  தன்னை விட 10 வயது குறைவான காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்: அமெரிக்க ஊடகம் தகவல் gettyimages 180681948 1532712824gettyimages-453713208-1532713137  தன்னை விட 10 வயது குறைவான காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்: அமெரிக்க ஊடகம் தகவல் gettyimages 453713208 1532713137gettyimages-986363884-1532710117  தன்னை விட 10 வயது குறைவான காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்: அமெரிக்க ஊடகம் தகவல் gettyimages 986363884 1532710117gettyimages-1000382156  தன்னை விட 10 வயது குறைவான காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்: அமெரிக்க ஊடகம் தகவல் gettyimages 1000382156