பாகுபலி படத்தில் நடித்தபிறகு ரசிகர்களின் மிக பேவோரைட் ஜோடியாக மாறிவிட்டனர் அனுஷ்கா-பிரபாஸ். அவர்கள் இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாகவும் அடிக்கடி ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வளர்கின்றன.
இந்நிலையில் இது உண்மையா என அனுஸ்காவின் அம்மாவிடம் ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் “அவர்ககள் இருவரும் ஸ்டார்ஸ், ஒன்றாக நடித்துள்ளனர். பிரபாஸ் போன்ற Mr Perfect அனுஷ்காவிற்கு கிடைப்பதை தான் நான் விரும்புவேன். ஆனால் அவர்கள் வெறும் நண்பர்கள் தான். தேவையில்லாமல் அவர்கள் பற்றி வதந்தி பரப்பாதீர்கள்” என கூறியுள்ளார்.
இதன்மூலம் இத்தனை நாள் வந்த செய்திகள் அனைத்தும் வதந்தி என்பது உறுதியாகியுள்ளது.







