பைக்கை திருட திருட்டு பைக்கிள் வந்த திருடன்….புரியலையா என்னனு….சுவாரசியத்தை முழுசா படியுங்கள்!

திருச்சி பகுதிகளில் பைக்குகளை திருடி வந்த வாலிபரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

திருச்சி பலக்கரைப் பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்பவர், தன்னுடைய இருசக்கர வாகனம் திருட்டுப் போனதாக காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், மேல அம்பிகாபுரம் பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவர், விஸ்வாஸ் நகரில் வாகனங்களை நோட்டமிட்ட போது, காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.

அப்போது அவரிடமிருந்து, நடராஜனின் இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது. அவரிடமிருந்து நடைபெற்ற விசாரணையில், அவரிடமிருந்து மேலும் 5 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டன.

மேலும், அவர் திருச்சியிலும் தஞ்சாவூர் பகுதியிலும் இருசக்கர வாகனங்களைத் திருடி வந்தது கண்டறியப்பட்டது.