ஒரு பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வம்சம் சீரியலில் ஜோதிகா என்ற கேரக்ட்டரில் நடித்தவர் பிரியங்கா. இவர் நேற்று குடும்ப பிரச்சனை காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
நடிக்க வந்துவிட்டாலும் அவர் படிப்பிலும் கவனம் செலுத்தி வந்துள்ளார். “ஐ.ஏ.எஸ் மற்றும் டி.என்.பி.எஸ்.சி `குரூப் 1′ எக்ஸாமுக்கு சீரியஸா படிச்சுட்டிருக்கேன். எப்பவும் புக்கும் கையுமாதான் இருப்பேன்” என அவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
சென்ற மாதம் தான் அவர் ஒரு புதிய பொட்டிக் ஷாப் திறந்து நடந்து வந்துள்ளார். ஆனால் கடைசிவரை அவரின் ஐ.ஏ.எஸ் கனவு நிறைவேறாமல் போனது தான் சோகம்.







