பிக்பாஸ் சீசன் 2 முதல் சீசனை போல் விறுவிறுப்பாக இல்லை என்பது ரசிகர்களுக்கு தோன்றும் எண்ணம். ஆனால் 2வது சீசனில் இனி தான் சூடு பிடிக்கும் என்பது போல் தெரிகிறது.
ஏற்கெனவே நிகழ்ச்சியை பார்த்து மிகவும் தெளிவாக விளையாடி வந்த போட்டியாளர்களின் நிஜ குணம் இப்போது தான் வெளிவர ஆரம்பித்துள்ளது. இன்று காலை வெளியான புரொமோவில் தாடி பாலாஜி, டேனியல், வைஷ்ணவி இடையே கடும் மோதல் ஏற்படுகிறது.
ஆனால் எந்த விஷயத்தால் இவர்களுக்குள் சண்டை என்பது தெரியவில்லை. NSK ரம்யாவும் கொஞ்சம் அமைதியாக இரு என்று வைஷ்ணவியிடம் கூறுகிறார். உண்மையில் என்ன சண்டை என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்ப்போம்.
#பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/X4ToioqvL3
— Vijay Television (@vijaytelevision) 28 June 2018






