கடந்த 12ஆம் தேதி சென்னை தி.நகரில் உள்ள நடிகர் பிரபு வீட்டு வாசல் அருகே ஜார்ஜ் என்ற நபர் நடந்து சென்று கொண்டிருந்த போது, அவரை இருசக்கர வாகனத்தில் வந்த 4 வாலிபர்கள் பின்னால் துரத்தி வந்து அவரிடம் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து ஜார்ஜ் என்பவர் காவல்துறையில் புகார் அளித்திருந்தார், அனால் வழிப்பறி திருடர்கள் பற்றி எந்த தகவலும் கிடைக்காமல் இருந்தது. அந்த சம்பவம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் நடிகர் பிரபு வீட்டின் எதிரே நடந்துள்ளது.
இந்த சம்பவம் அனைத்தும் நடிகர் பிரபு வீட்டு வாசலில் பொருத்தப்பட்ட சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ பதிவுகளை பார்த்த நடிகர் பிரபு சிசிடிவி வீடியோ காட்சிகளை தாமாக முன்வந்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்.
இதையடுத்து, பிரபு ஒப்படைத்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 4 இளைஞர்களை தி.நகர் பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அந்த வீடியோ காட்சிகள் கொள்ளையர்களை பிடிக்க எளிதாக இருக்கும் என கருதுகின்றனர்.







