சர்கார் படத்தின் மூலம் விஜய்க்கு முதன்முதலாக நடக்கப்போகும் விஷயம்- அதிரடி மாஸ்

முருகதாஸ்-விஜய் என்றாலே மாஸ் தான் என்பது ரசிகர்களின் எண்ணம். அவர்களது கூட்டணியில் வெளியான துப்பாக்கி, கத்தி படம் போல இப்படமும் பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் என்று எதிர்ப்பார்ப்பு அனைவரிடமும் இருக்கிறது.

விஜய் பிறந்தநாள் ஸ்பெஷலாக படத்தின் பெயர் வந்துவிட்டது, அடுத்தடுத்து படத்தை பற்றிய விஷயங்கள் வெளியாகவும் உள்ளது.

விஜய்-ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் உதயா, அழகிய தமிழ்மகன், மெர்சல் படத்தை தொடர்ந்து சர்கார் படமும் உருவாகி வருகிறது. இந்த படங்களில் விஜய்க்கு தீம் பாடல்கள் இல்லை, ஆனால் இவர்களது கூட்டணியில் தயாராகும் சர்கார் படத்தில் விஜய்க்கு முதன்முதலாக தீம் பாடல் அமைய இருக்கிறது.