ஆபத்தின் விளிம்பில் உலகம்! தாக்குதலில் நடக்கும் மர்மம்

அமெ­ரிக்கா, பிரிட்­டன், பிரான்ஸ் ஆகிய நாடு­கள் இணைந்து சிரியா மீது நேற்று தாக்­கு­தல் நடத்­தி­யுள்­ளன.

போர்க் கப்­பல்­க­ளில் இருந்து இயக்­கப்­ப­டும் தன்­னி­யக்க வழி­காட்டு ஏவு­க­ணை­கள் மற்­றும் போர் வானூர்­தி­கள் தாக்­கு­தல்­களை நடத்­தி­யுள்­ளன.

சிரி­யா­வில் நடந்­து­வ­ரும் உள்­நாட்­டுப் போரில் அந்த நாட்டு அரசு இர­சா­யன ஆயு­தங்­க­ளைப் பயன்­ப­டுத்தி வரு­கின்­றது என்று குற்­றஞ்­சாட்டி அதற்கு எதிர்ப்­புத் தெரி­வித்தே இந்­தத் தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டுள்­ளது.

சிரி­யா­வில் பத­வி­யில் உள்ள அதி­பர் அல் அசாத்­தின் ஆட்­சிக்கு ரஷ்யா தொடர்ந்­தும் உறு­தி­யான ஆத­ரவு வழங்­கி­வ­ரு­கின்­றது.

பதி­லுக்கு சிரிய அரசை எதிர்த்­துப் போரா­டும் கிளர்ச்­சிக் குழுக்­க­ளுக்கு அமெ­ரிக்கா ஆயு­தங்­கள் உள்­ளிட்ட உத­வி­களை வழங்கி வரு­கின்­றது.

கடந்த 4 வரு­டங்­க­ளாக சிரி­யா­வில் உள்­நாட்­டுப் போர் தீவி­ர­மாக நடந்து வந்­தா­லும் அதில் எந்­தத் தரப்­பும் உறு­தி­யான வெற்­றி­யைப் பெறு­வ­தாக இல்லை. அப்­பாவி மக்­க­ளின் உயிர்­களே அநி­யா­ய­மா­கப் பறிக்­கப்­பட்டு வரு­கின்­றன.

கிளர்ச்­சி­யா­ளர்­க­ளுக்கு எதி­ரான தாக்­கு­தல்­க­ளில் அப்­பாவி மக்­க­ளின் உயிர்­க­ளைப் பற்­றிக் கவ­லைப்­ப­டா­மல் வேதி­யல் குண்­டு­க­ளை­யும் வீசி சிரிய அரசு அப்­பாவி மக்­க­ளை­யும் கொன்று வரு­கின்­றது என்­கிற குற்­றச்­சாட்டு தொடர்ந்து கூறப்­பட்டு வரு­கின்­றது. ஆனால் சிரிய அரசு அத­னைத் தொடர்ந்து மறுத்து வரு­கின்­றது.

அலப்­போ­வி­லும் தொடர்ந்து கவுட்டா, டௌமா நக­ரங்­க­ளி­லும் வேதி­யல் குண்­டு­கள் வீசப்­பட்­ட­தில் ஆயி­ரக்­க­ணக்­கான அப்­பாவி மக்­கள் கொல்­லப்­ப­டு­கின்­றார்­கள் என்ற குற்­றச்­சாட்டு மனித உரி­மை­கள் அமைப்­பு­க­ளால் தொடர்ந்து தெரி­விக்­கப்­பட்டு வரு­கின்­றது.

இத­னை­ய­டுத்தே சிரி­யா­வின் வேதி­யல் ஆயு­தக் கிடங்­கு­கள் மற்­றும் வேதி­யல் ஆயு­தங்­கள் தயா­ரிக்­கப்­ப­டும் இடங்­கள் என்று சந்­தே­கிக்­கப்­ப­டும் பகு­தி­க­ளின் மீது அமெ­ரிக்கா, பிரிட்­டன், பிரான்ஸ் ஆகிய நாடு­க­ளின் படை­கள் தாக்­கு­தல்­களை நடத்­தி­யுள்­ளன.

இந்­தத் தாக்­கு­தல் தொடர்ந்து நடத்­தப்­ப­ட­மாட்­டாது என்­றும் சிரிய அரசு, எச்­ச­ரிக்­கை­யை­யும் மீறி வேதி­யல் ஆயு­தங்­க­ளைப் பயன்­ப­டுத்­தி­ய­தன் விளை­வா­கவே இந்­தத் தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டது என்­றும் மீண்­டும் இது­போன்ற வேதி­யல் தாக்­கு­தல்­கள் நடத்­தப்­பட்­டால் அப்­போது மேற்­கொண்டு எடுக்­கப்­ப­டும் நட­வ­டிக்கை குறித்து முடி­வெ­டுக்­கப்­ப­டும் என்­றும் பிரான்ஸ் அதி­பர் மக்­ரோன் தெரி­வித்­தார்.

இந்­தத் தாக்­கு­த­லுக்­கான விளைவு நிச்­ச­யம் இருக்­கும் என்­றும் அதற்கு அமெ­ரிக்கா, பிரான்ஸ், பிரிட்­டன் ஆகிய நாடு­களே பொறுப்பு என்­றும் ரஷ்யா எச்­ச­ரித்­துள்­ளது. அமெ­ரிக்­கா­வில் உள்ள ரஷ்­யத் தூதர் இந்த எச்­ச­ரிக்­கையை விடுத்­துள்­ளார்.

சிரியா விட­யத்­தில் மேற்கு நாடு­க­ளும் ரஷ்­யா­வும் மிகத் தெளி­வாக எதிர் எதிர்த் திசை­க­ளில் நின்று போரி­டு­வது புல­னா­கின்­றது. இது இரண்­டாம் உல­கப் போருக்­குப் பின்­னர் உரு­வான பனிப் போரை நினை­வு­ப­டுத்­து­கின்­றது.

1991இல் சோவி­யத் ஒன்­றி­யத்­தின் வீழ்ச்­சிக்­குப் பின்­னர் பனிப்­போர் முடி­வுக்கு வந்­த­தா­கக் கரு­தப்­பட்­டா­லும் நீறு பூத்த நெருப்­பா­கக் கனன்று வந்த அது இப்­போது அப்­பட்­ட­மாக வெளிப்­பட ஆரம்­பித்­தி­ருக்­கின்­றது.

‘‘பழி­வாங்­கும் எண்­ணத்­தோடு பனிப்­போர் மனப்­பான்மை திரும்பி வந்­துள்­ளது’’ என்று ஐக்­கிய நாடு­கள் சபை­யின் பொதுச் செய­லா­ளர் அன்­ர­ணியோ குத்­தேர்ஸ்­சும் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளார்.

‘‘ஆபத்து வளர்­வதை மேலாண்மை செய்­கின்ற பாரம்­ப­ரிய பொறி­மு­றை­கள் இப்­போது ஏது­மில்லை. வர்த்­த­கப்­போர் பழி­வாங்­கும் எண்­ணத்­தோடு, வித்­தி­யா­ச­மான முறை­யில் வந்­துள்­ளது .

இத்­த­கைய ஆபத்­தான சூழ்­நி­லை­யில் நாடு­கள் பொறுப்­பு­ணர்­வோடு செயல்­பட வேண்­டும் என்று தோன்­று­கின்­றது’’ என­வும் ஐ.நா. பாது­காப்­புச் சபை­யில் பேசி­ய­போது குத்தேரஸ் தெரி­வித்­தி­ருக்­கி­றார்.

பல­முள்ள நாடு­க­ளின் முன்­னால் பல­வீ­ன­மான அமைப்­பாக நின்­றி­ருக்­கும் ஐ.நாவின் பொதுச் செய­லர் சொல்­வ­தைக் கேட்­கும் நிலை­யில் அமெ­ரிக்கா, பிரிட்­டன், பிரான்ஸ் ஆகிய நாடு­கள் இல்லை.

இந்த மூன்று நாடு­க­ளுமே பாது­காப்­புச் சபை­யில் வெட்டு (வீட்டோ) அதி­கா­ரத்­தைக் கொண்­டவை. எனவே தடி­யெ­டுத்­த­வன் தண்­டல்­கா­ரன் என்ற வகை­யில் அவற்­றின் செயற்­பா­டு­கள் தொட­ரவே செய்­யும். அதன் வழி புதிய உலக ஒழுங்கு ஒன்­றும் உரு­வாக்­கப்­ப­டும்.

இந்­தப் புதிய உலக ஒழுங்கு, பனிப் போர் ஒழுங்கு புவி­சார் அர­சி­ய­லில் ஏற்­ப­டுத்­தப்­போ­கும் தாக்­கம் அது இலங்கை அர­சி­ய­லில் செலுத்­தப்­போ­கும் செல்­வாக்கு என்­ப­வற்­றைக் கணித்து, அத­னைத் தெளி­வா­கக் கையாண்டு எப்­ப­டித் தமி­ழர்­கள் தமது நலன்­க­ளைப் பேணிக்­கொள்­ளப் போகி­றார்­கள் என்­பதே நாம் இங்கு கூர்ந்து கவ­னிக்க வேண்­டிய விட­யம்.