யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வவுனியாவில் நேற்றுச் சடலமாக மீட்கப்பட்டார் என்று வவுனியாப் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த அந்தோனி நிக்சன் (வயது 30) என்பவரின் சடலம் அது என அடையாளம் காணப்பட்டது.
வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியில் உள்ள விடுதி ஒன்றிலிருந்து நேற்று மாலை 3 மணியளவில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அந்த இளைஞன் கடந்த முதலாம் திகதி முதல் குறித்த விடுதியில் தங்கியிருந்தார் என்பது தெரியவந்துள்ளது.
அவருடைய சடலத்துக்கு அருகில் நஞ்சுப் போத்தல் காணப்பட்டது. தவறான முடிவெடுத்து நஞ்சருந்தி அவர் உயிரிழந்திருக்கலாம் என்று சந்துகிக்கப்படுகிறது சடலம் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளது.
உடற்கூற்றுப் பரி சாதனைகள், விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.






