கொழும்பு தேசிய வைத்தியசாலை விடுத்துள்ள விசேட எச்சரிக்கை!

இலங்கை மக்கள் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு கொழும்பு தேசிய வைத்தியசாலை கோரிக்கை விடுத்துள்ளது.

புத்தாண்டு நிகழ்வுகளினால் ஏற்படுகின்ற விபத்துக்களை குறைத்து கொள்வதற்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுமாறு பொது மக்களிடம், கொழும்பு தேசிய வைத்தியசாலை கோரிக்கை விடுத்துள்ளது.

பாதுகாப்பான நடவடிக்கை மேற்கொள்வதன் மூலம் விபத்துக்களை தடுக்க முடியும் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதான தாதி புஷ்பா ரம்யா டி சொய்சா தெரிவித்துள்ளார்.

ஆபத்துக்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் அம்பியுலன்ஸ் வண்டி சேவையை வழங்குவதற்கு கொழும்பு தேசிய வைத்தியசாலை தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.