பூனை குறுக்கே வந்தால் அந்த வழியில் போகக் கூடாது என்று பூனையை எப்போதுமே நாம் ஒரு அபசகுனமாக தான் நாம் பார்த்து வருகிறோம்.
உண்மையில் பூனைகளுக்கு தீய சக்திகளை எதிர்கொண்டு தாங்கும் திறன் இருக்கிறது என்றும், இது கெட்ட சக்திகளை துரத்தி விரட்டும் என்றும் கூறப்படுகிறது.
செல்லப் பிராணியான பூனையை வைத்து வீட்டில் இருக்கும் கெட்ட சக்தியை அகற்றுவதற்கு சில வழிகள் இருக்கின்றது.
நம் வீட்டில் வளரும் பூனை, ஏதேனும் ஒரு மூளை அல்லது பகுதியில் அதிக நாட்டம் செலுத்துகிறது எனில், அந்த இடத்தில் பூஜைகள் செய்து வந்தால், கெட்ட சக்தியை வீட்டில் இருந்து நீக்கலாம்.
கெட்ட சக்திகளிடம் இருந்து மட்டுமின்றி, பிறரது சாபத்தின் கெட்ட பார்வையில் இருந்தும் பூனை, நம்மையும், நமது வீட்டையும் பாதுகாக்குமாம். இதற்கு எல்லாம் காரணம் நம்மை சுற்றி இருக்கும் எதிர்மறை சக்தியை பூனை அகற்றுவது தானாம்.
எந்த நிறமுள்ள பூனையை வளர்ப்பது அதிர்ஷ்டம்?
- கருப்பு நிற பூனைகளிடம் எதிர்மறை சக்தியை அகற்றும் திறன் அதிகம் உள்ளது. அதனால் இந்த பூனை அமானுஷ்ய சக்திகள் மற்றும் சாபங்களில் இருந்து நம்மை காப்பாற்றும்.
- கருப்பு, வெள்ளை, சிவப்பு ஆகிய மூன்று நிற கலப்பு கொண்ட பூனைகளை வளர்த்தால், அவை கெட்டவை நடக்காமல், தீய சக்தி அண்டாமல் நம்மை பாதுகாப்பதுடன், நம் வீட்டுக்கு அதிர்ஷ்டம் மற்றும் செல்வ வளத்தை அதிகரிக்க செய்யுமாம்.
- நீலம் அல்லது சாம்பல் நிற பூனைகளை வளர்த்தால், அது நம் வீட்டில் மகிழ்ச்சியும், அதிர்ஷ்டமும் அதிகரிக்க செய்யுமாம்.
- சாம்பல், வெள்ளை ஆகிய இரு கலப்பு நிறங்களை கொண்ட பூனையை வீட்டில் வளர்த்தால், அது எதிர்மறை சக்தியை கண்டறியும் திறனுடன் ஞானமும், பொது அறிவும் கொண்டிருக்குமாம்.
- ஆமை கூடுனை போல கலப்பு நிறம் கொண்ட பூனையானது ஞானதிருஷ்டி திறன் கொண்டது. இதன் முன் கெட்டவை நடக்கும் முன்னரே தனது செயல்கள் மூலம் அறிகுறிகள் வெளிப்படுத்துமாம்.