கண் இப்படி இருக்கா? அப்போ இந்த நோய் இருக்கு!

சிலருக்கு நன்றாக இருந்த கண்கள் திடீரென மஞ்சளாக மாறியிருக்கும். அதை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது

கண்கள் மஞ்சளாக மாறினால் அது சில முக்கிய நோய்களின் அறிகுறியாகும்.

முறையற்ற மல வெளியேற்றம்

உயிரைக் கொல்லக்கூடிய ஒரு ஆபத்தான நோய் மஞ்சள் காமாலை ஆகும்.

மஞ்சள் காமாலை நோய் நமது இரத்தத்தில் உள்ள ஹூமோகுளோபின் பிலிரூபினாக உடைவதால் ஏற்படுகிறது.

பிலிரூபின் முதலில் நமது கல்லீரலை அடைந்து அங்கிருந்து பித்த குழாய் வழியாக மலமாக வெளியேறுகிறது.

ஆனால் இது சரிவர நடக்காதபட்சத்தில் இந்த பிலிரூபின் நமது சருமத்திலயே தங்கி கண்கள் மஞ்சள் நிறமாக மாறுவதோடு, மலம் கழிப்பதிலும் பிரச்சனை ஏற்படும்.

கல்லீரல்

ஒருவரது உடலில் உள்ள கல்லீரல் உறுப்பு சரியாக செயல்படாத நிலையிலும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறும், இதனால் கல்லீரலில் பாதிப்பு அல்லது ஈரல் நோய் ஏற்படுகிறது.

மதுப்பழக்கம், கல்லீரல் புற்று நோய் மற்றும் கல்லீரல் தொற்று காரணமாக கல்லீரல் பாதிப்படைகிறது.

பித்தப்பை

கல்லீரலில் உள்ள பித்த பையில் பித்த நீர் சுரக்கப்பட்டு அது சீரண வேலைகளை செய்கிறது. நமது பித்தப்பை அடைக்கப்படும் போது நமக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகிறது.

இதுபோன்ற சமயத்திலும் கண் மஞ்சள் நிறத்தில் மாறுவதோடு குளிர் நடுக்கம், காய்ச்சல், வயிற்று வலி தீடீரென்று உடல் எடை குறைதல் போன்ற அறிகுறிகள் தோன்றும்.

ரத்த கோளாறுகள்

இரத்த சிவப்பணுக்களின் சிதைவு சரியாக நடக்கவில்லை என்றாலும் பிலிரூமின் அளவு அதிகரித்து மஞ்சள் காமாலை நோய் ஏற்படும். இதனால் கண்கள் மஞ்சள் நிறத்தில் மாற ஆரம்பித்து விடும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியமாகும்.