கூட்டமைப்பின் அரசியல் தோல்வி?

உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகளுடன் தென்னிலங்கையின் அரசியல் சமநிலை குழம்பிவிட்டது.

தற்போது நடைபெற்றுவரும் சிங்கள – முஸ்லிம் முறுகல்நிலையானது, நாட்டின் ஸ்தரத் தன்மையை மேலும் பாதித்திருக்கிறது.

இவ்வாறானதொரு சூழலில் கூட்டமைப்பு அல்லது இலங்கை தமிழரசு கட்சி இதுவரை வெளியிட்டுவந்த அரசியல் தீர்வு தொடர்பான நம்பிக்கைகள் அனைத்தும் கானல் நீராகிவிட்டது.

சம்பந்தன் அரசியல் தீர்வு தொடர்பில் தொடர்ந்தும் நம்பிக்கையை வெளிப்படுத்தி வந்தார்.

புதிய அரசியல் யாப்பு ஒன்றின் ஊடாக அரசியல் தீர்வு கிடைக்கும் என்பதே தமிழ் மக்களுக்கு சொல்லப்பட்டுவந்த கதை.

தற்போது அந்தக் கதையை எழுதிய சம்பந்தன்-சுமந்திரன் தரப்பு கதையின் போக்கை எவ்வாறு மாற்றி எழுதுவதென்று தெரியாமல் குழம்பிப் போயிருக்கின்றனர்.

அரசியல் நேயர்களுக்கு நினைவிருக்கலாம். 2015, ஜனவரி 8இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த பத்தியாளர் இவ்வாறு எழுதியிருந்தார்.

இது ஒரு திணிக்கப்பட்ட ஆட்சி மாற்றமேயன்றி, இலங்கை மக்களின் விரும்பங்களிலிருந்து இயல்பாக ஏற்பட்ட ஒன்றல்ல. ஆட்சியார்கள் மீது அதிருப்தி ஏற்பட்டால் மக்கள் அந்த ஆட்சிக்கு எதிராக சிந்திப்பார்கள்.

அவ்வாறான சந்தர்ப்பத்தில் அதனை ஒரு முலதனமாகக் கொண்டு எதிரணியினர் ஆட்சியை மாற்றுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

ஆனால் இங்கு நடந்த ஆட்சி மாற்றம் அப்படியான ஒன்றல்ல. ஆட்சி மாற்றம் தொடர்பில் பெரும்பாண்மையான சிங்கள மக்கள் கரிசனை காண்பித்திருக்கவில்லை.

mahinda6-626x380 கூட்டமைப்பின் அரசியல் தோல்வி? - யதீந்திரா (கட்டுரை) கூட்டமைப்பின் அரசியல் தோல்வி? - யதீந்திரா (கட்டுரை) mahinda6அவர்கள் முன்னைய ஆட்சியாளரான மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாகவே இருந்தனர். அந்த ஆதரவு இன்றுவரை தொடர்கிறது.

இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகள் ராஜபக்சவின் வாக்கு வங்கி பெரியளவில் சரியவில்லை என்னும் உண்மையை வெளிப்படுத்தியிருந்தது.

தென்னிலங்கை அரசியலை ஆழமாக பார்த்தால் ஒரு விடயம் வெள்ளிடைமலை அதாவது, தற்போது ஏற்பட்டிருக்கும் அனைத்து குழப்பங்களுக்கும் உள்ளுராட்சி தேர்தல் முடிவுகளே காரணம்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியை இரு கூறாக்கினால் மிக இலகுவாக தாங்கள் வெற்றிபெற்று விடலாம் என்னும் ரணிலின் கணக்கு முற்றிலும் தோல்வியடைந்திருக்கிறது.

920e74ddc49b56e1eedc29b60cb99fb2_L கூட்டமைப்பின் அரசியல் தோல்வி? - யதீந்திரா (கட்டுரை) கூட்டமைப்பின் அரசியல் தோல்வி? - யதீந்திரா (கட்டுரை) 920e74ddc49b56e1eedc29b60cb99fb2 Lமைத்திரி தலைமையிலான அணியினரோ இந்த வீழ்ச்சிக்கு ஜக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டு வைத்திருப்பதுதான் காரணம் என்று கருதுகின்றனர்.

இவ்வாறான குழப்பங்களின் மத்தியில்தான் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் சிந்திக்கப்பட்டது.

தற்போது அந்த விடயத்தை கீழ் நிலைக்குத் தள்ளிவிடும் வகையில் முஸ்லிம்களுக்கு எதிரான விவகாரம் முன்னணி வக்கிக்கிறது. ஒரு கோட்டை சிறிதாக்க வேண்டுமென்றால் அதன் அருகில் பிறிதொரு கோட்டை பெரிதாக்கப் போட வேண்டும் என்பார்கள்.

tna_vantharumulai_visit கூட்டமைப்பின் அரசியல் தோல்வி? - யதீந்திரா (கட்டுரை) கூட்டமைப்பின் அரசியல் தோல்வி? - யதீந்திரா (கட்டுரை) tna vantharumulai visit

ஆனால் நிலைமைகளை ஆழமாக அவதானித்தால் ஆட்சி மாற்றம் தொடர்பான கற்பனைகள் அனைத்துமே ஒரு முடிவுக்கு வந்துவிட்டன.

உண்மையில் ஆட்சி மாற்றம் என்பது தற்போது அந்த ஆட்சியை தக்கவைப்பதற்கான அரசியலாக சுருங்கியிருக்கிறது.

இதனை இன்னும் ஆழமாக பார்த்தால், ஆட்சி மாற்றம் தமிழர்களுக்கான அரசியல் வெளியை மேலும் சுருக்கியிருக்கிறது.

கூட்டமைப்பை வெறுமனே தென்னிலங்கையை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிற ஒரு அமைப்பாக தரம் குறைத்திருக்கிறது.

இடைக்கால அறிக்கை, புதிய அரசியல் யாப்பு, நிலைமாறு கால நீதி என்பவற்றின் கதை இனி நீளப் போவதில்லை. கூட்டமைப்பின் அரசியல் தோல்வி என்று நான் குறிப்பிடுவது இதைத்தான்.

கூட்டமைப்பினர் தங்களது தோல்வியை ஒப்புக் கொள்வார்களா? அரசியல் விவகாரங்களில் தோல்வி அடைவது ஒரு பாரதூரமான விடயமல்ல.

ஒரு குறிப்பிட்ட சூழலை கருத்தில் கொண்டு எடுக்கப்படும் முடிவுகள் அதச் சூழ்நிலை மாறுகின்ற போது சிக்கலுக்குள்ளாகலாம்.

இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை ஆனால் சூழ்நிலை சாதகமாக இருக்கின்ற போதே எடுக்கக் கூடியவைகளை எடுத்துக் கொள்வதுதான் ஒரு தலைமையின் பணியாக இருக்க வேண்டும்.

பாலசிங்கத்தின் வார்த்தையில் கூறுவதானால் அதுதான் தலைமையின் அழகு. அதற்காக அடிப்படைகளை விட்டுக் கொடுக்க வேண்டும் என்பதல்ல மாறாக குறித்த சூழ்நிலையை எந்தளவு தூரம் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியுமோ அந்தளவிற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆட்சி மாற்றம் ஒரு சாதகமான சூழ்நிலையை வழங்கியிருந்தது. அதனை அடிப்படையாக் கொண்டு, மாகாண சபை முறைமையிலுள்ள சில சிக்கல்களை கழையும் வகையில் சில ஏற்பாடுகளை செய்யுமாறு அரசாங்கத்தை கோரியிருக்கலாம்.

ஆளுனரின் அதிகாரங்களை குறைக்குமாறு வலியுறுத்தியிருக்காலம். அதற்கு அரசாங்கம் உடன்படாது விட்டிருந்தால் அதனையையே புதிய அரசியல் யாப்பு விடயங்களுக்கான ஒரு நிபந்தனையாக மாற்றியிருக்கலாம்.

ஒரு இடைக்கால ஏற்பாடாக சில விடயங்களை செய்து காண்பித்தால்தான் வழிகாட்டல் குழுவில் நாம் பங்குபற்றலாம் என்றவாறு பிடியை தொடர்ந்தும் கூட்டமைப்பின் பக்கமாகவே வைத்திருந்திருக்கலாம்.

இல்லாவிட்டால் நாங்கள் தனித்தரப்பாகத்தான் பேச முடியும் என்றவாறு பந்தை எப்போதும் கூட்டமைப்பின் பக்கமாகவே வைத்திருந்திருக்கலாம்.

625.500.560.350.160.300.053.800.900.160.90 கூட்டமைப்பின் அரசியல் தோல்வி? - யதீந்திரா (கட்டுரை) கூட்டமைப்பின் அரசியல் தோல்வி? - யதீந்திரா (கட்டுரை) 625ஆனால் சம்பந்தன் எதனையுமே செய்யவில்லை. பந்தை எறியும் பொறுப்பை ரணிலிடன் ஒப்படைந்திருந்தார்.

கடந்த இரண்டரை வருடங்களாக தென்னிலங்கை எறிந்த பந்தை கூட்டமைப்பு பொறுக்கிக் கொண்டிருகக்கிறது.

இதில் வெறுமனே சம்பந்தன் – சுமந்திரன் தரப்பை மட்டும் குற்றம் சாட்ட முடியாது. கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இதில் பெரிய பங்குண்டு. அவர்கள் தங்களின் தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும்.

தாங்கள் இருக்கின்ற ஒரு இடத்தில் விடயங்கள் தவறாக அனுகப்படுகின்றன என்றால், ஒன்றில் அதனை திருத்தியமைக்க வேண்டும் அல்லது அங்கிருந்து வெளியேற வேண்டும். ஆனால் பங்காளிக் கட்சிகளோ இரண்டையுமே செய்யவில்லை.

ஒரு கதை சொல்லப்படுவதுண்டு. நாடு எரிகின்ற போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தானாம்.

சம்பந்தன் திருகோணமலையில் செய்து கொண்டிருக்கிற பணிகளை பார்த்தால் அந்தக் கதையே நினைவுக்கு வருகிறது.

திருகோணமலை நகர சபை, பிரதேச சபைகளுக்கு தெரிவான தமிழரசு கட்சி அல்லாத உறுப்பினர்களுடன் சம்பந்தன் பேரம் பேசிக் கொண்டிருக்கிறார்.

ஒரு இனத்தின் தலைவர் என்பவர் தனது பணிகளை விட்டுவிட்டு ஒரு சாதாரண நகர சபை, பிரதேச சபை விடயத்தில் தனது ஆற்றலை செலவிட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்தளவு சாதாரண விடயத்தைக் கூட கையாளுவதற்கு அவரிடம் திருகோணமலையில் ஆட்கள் இல்லை.

தமிழ் படங்களில் வரும் ஒரு நகைச் சுவை நடிகர் அடிக்கடி ‘என்ன கொடுமை சரவணா’ என்பார்.

தமிழ் அரசியலும் கிட்டத்தட்ட அப்படியான ஒரு நிலையில்தான் இருக்கிறது. எவரிடமும் எந்தவொரு வேலைத்திட்டமும் இல்லை.

ஆனால் மேடை முழக்கங்கள் மட்டுமுண்டு. இது கூட்டமைபுக்கு மட்டுமல்ல கூட்டமைப்பிற்கு வெளியில் இருப்பவர்களுக்கும் பொருந்தும்.

அரசியலில் வாய்ப்புக்கள் வராமல் போகாது. ஆனால் அவ்வாறு வாய்புக்கள் வருகின்ற போது அதனை பயன்படுத்திக் கொள்ளும் திறமையுள்ள தலைவர்கள் இருக்க வேண்டும்.

உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகளின்படி கூட்டமைப்பின் வாக்கு வங்கி வீழ்சியடைந்திருந்தாலும் கூட, ஒரு தனிக்கட்சி என்னும் அடிப்படையில் பார்த்தால் தற்போதும் கூட்டமைப்புத்தான் வடக்கு கிழக்கிலுள்ள முதன்மையான கட்சி.

யாழ்ப்பாணத்திற்குள் சில மாற்றங்கள் தென்பட்டாலும் கூட அந்த மாற்றங்கள் ஏனைய பகுதிகளுக்கு பரவக் கூடிய சாதகமான சூழல் இல்லை.

குறிப்பாக கிழக்கில் அனைத்து கட்சிகளும் ஒரணியில் நிற்க வேண்டும் என்றவாறான கோசங்கள் பரவலாகி வருகின்றன.

வடக்கின் அரசியல் சமன்பாடுகள் கிழக்கிற்கு பொருந்தாது என்பதில் நியாயமான உண்மையுண்டு.

கூட்டமைப்பின் தலைவர்கள் சிந்திக்கவும் திருந்தவும் சந்தர்ப்பங்கள் இல்லாமலில்லை. ஆனால் அதற்கான முயற்சிகளை எவரும் எடுத்ததாக சான்றில்லை.

கூட்டமைப்பு தன்னை திருத்திக் கொள்ள வேண்டுமாயின் முதலில் அது தனது தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும்.

அந்தத் தோல்விக்கு காரணமானவர்கள் கூட்டமைப்பிலிருந்து விலகிச் சென்றால் அது இன்னும் ஆரோக்கியமான ஒன்றாக இருக்கும்.

கூட்டமைப்பிற்குள் ஆற்றல் வாய்ந்தவர்களுக்கு இடமளிக்கப்பட வேண்டும். கூட்டமைப்பு தன்னை திருத்திக் கொள்ளாமலும் இருக்கலாம் ஆனால் அது தமிழ்த் தேசிய இருப்பை தொடர்ந்தும் சிதைக்கும்.

மக்கள் தமிழ்த் தேசியக் கட்சிகள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை வீழ்சியடையும். இந்த இடைவெளியை தென்னிலங்கை கட்சிகள் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளும்.

தென்னிலங்கை கட்சிகள் தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கை பெற முயற்சிப்பதும் கூட, தமிழ்த் தேசியத்திற்கு எதிரான கொழும்பு-நிகழ்சிநிரலின் ஒரு அங்கம்தான்.

– யதீந்திரா