பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். தற்போது சீசன் 6-ஐ துவக்கி வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைத்து போட்டியாளர்களும் தங்கள் திறமையை நிரூபித்து வாய்ப்பு கிடைத்தால் போதும் என்று ஏங்கி இருப்பார்கள்.
இந்நிலையில் சூப்பர் சிங்கர் சீசன் 4ல் இரண்டாம் இடம்பிடித்தவர் கனடாவாழ் ஈழச்சிறுமி ஜெசிக்கா. தன் குரலால் அனைவரையும் உருகவைத்து மனதை கரைய வைத்தவர் ஜெசிக்கா.
இவர் தான் பரிசாக பெற்ற 1 கிலோ தங்கத்தை தமிழக மற்றும் ஈழத்தில் வாழும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார்.
இவர் தற்போது ‘நினைவுகள்’ என்ற கனடா நாளிதழில் முதற்பக்கத்தில் காட்சியளிக்கிறார். இதனை தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதில் சற்றே உடல் எடையை கூட்டி, சிறு வயது ஜெசிக்கா எங்கே என்ற கேள்வியை கேட்கும் படியாக உள்ளது.
மேலும் வரும் ஏப்ரம் மாதம் 1ம் திகதி இசைப்புயல் இளையராஜாவின் கனடாவில் நடக்கவிருக்கும் ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள இருக்கிறாராம்.