பிரதமர் பதவி வேண்டாம்! பகிரங்கமாக நிராகரித்த மஹிந்த!

பிரதமர் பதவியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பகிரங்கமாக நிராகரித்துள்ளார்.

புண்ணியத்திற்காக பிரதமர் மற்றும் அமைச்சு பதவிகளை ஏற்றுக்கொள்வதற்கு தான் ஒருபோதும் தயார் இல்லை என மஹிந்த தெரிவித்துள்ளார்.

சமகால அரசாங்கத்தை மாற்றி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த பிரதமர் ஒருவரின் கீழ் அரசாங்கம் அமைப்பதென்றால் அதனை நடத்தி செல்லுமாறு மஹிந்த தெரிவித்துள்ளார்.

சுதந்திர கட்சி தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சியில் இருந்து தான் ஆதரவு வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மல்வத்து அஸ்கிரிய தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்ட மஹிந்த, அதன்பின்னரான ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.