மீண்டும் தலைதூக்கிய வாள்வெட்டு! விசேட பொலிஸ் குழுக்கள் களத்தில்!!

கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள வாள்வெட்டு சம்பவங்களின் காரணமாக பொலிஸார் சோதனை நவடிக்கைகளை தீவிரப்படுத்தவுள்ளனர்.அந்த வகையில், யாழில் பொலிஸாரின் வீதிச் சோதனை நடவடிக்கைகள் மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இது தொடர்பில் பொலிஸார்  தகவல் வெளியிடும் போது; சில மாதங்களுக்கு முன்னர் வாள்வெட்டுச் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்திருந்தன.அதன்போது சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு பலர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து வாள்வெட்டு சம்பவங்களில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தன. இருந்த போதிலும் கடந்த சில நாட்களாக மீண்டும் வாள்வெட்டு சம்பவங்கள் தலை தூக்கியுள்ளன.இதனால் கடந்த முறை மேற்கொள்ளப்பட்டது போல, இம்முறையும் சோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.