பெருவின் தெற்குப் பிராந்தியமான அரேகீப்பா (Arequipa) பகுதியில் நேற்று ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 65 பேர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந் நிலநடுக்கத்தின்போது 55 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 65 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மேலும் இந் நிலநடுக்கத்தால் 63க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமாகியுள்ளன.
இந் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அரேகீப்பா பகுதியில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.







