இன்றைய தினம் விடுமுறை கிடையாது!

இன்றைய தினம் அரச விடுமுறை கிடையாது என உள்நிர்வாக அமைச்சர் வஜிர அபேவர்தன அறிவித்துள்ளார்.2018ம் ஆண்டில் 124 நாட்கள் விடுமுறை நாட்கள் எனவும் இதனால் இன்றைய தினத்தை அரச விடுமுறையாக அறிவிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.நேற்றைய தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு இன்று அரச விடுமுறை உண்டா என ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.2018ம் ஆண்டின் 365 நாட்களில் சனி, ஞாயிறு உள்ளிட்ட 124 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டில் 13 பௌர்ணமி தினங்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.இதேவேளை, இன்றைய தினம் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.