பா.ஜ.க தேசிய செயலாளரான எச்.ராஜா வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியினர் எச்.ராஜாவின் வீட்டை முற்றுகையிட போவதாக தகவல் வெளியானதால் பாதுகாப்பு தற்போது பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள வீடு மற்றும் அவருடைய பண்ணை வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியும், சரிச்சைக்குரிய தகவல்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டும் வருபவர் எச்.ராஜா.
இந்நிலையில், திடீரென நாம் தமிழர் கட்சியினர் இவரது வீட்டை முற்றுகையிட உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தை தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் காரைக்குடி சுற்றுவட்டார பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.






