விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்த படம் தானா சேர்ந்த கூட்டம். இந்த வாரம் ரிலீஸாக இருக்கும் இந்த படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ் ஆகும். இந்த படத்திற்கு தற்போது சில எதிர்ப்புகளும் கிளம்பியுள்ள நிலையில், பொங்கலுக்கு ரிலீஸாகுமா என்பது கேள்வி குறி தான். இந்த படத்தை தொடர்ந்து சூர்யா அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடிக்கும் படத்தில் கமிட்டாகியுள்ளார்.

மேலும், இந்த படத்தை தொடர்ந்து அடுத்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் சூர்யா. அதையும் தொடர்ந்து, அடுத்து இயக்குனர் விக்ரம் குமார் படத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார். இந்த நிலையில் சூர்யா தற்போது மலேசியாவில் நடக்கும் நட்சத்திர விழாவிற்கு சென்றார்.
அங்கு மேடையில் அவர் பேசும்போது 5 ரசிகர்களை மேடைக்கு அழைக்க, அவரகள் ஐவரும் சூர்யா கால்களில் விழ சூர்யாவும் அவர்களின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெறுகிறார். இவை பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகின்றது. அந்த வீடியோவை சூர்யாவின் ரசிகர்கள் அவர்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்கள்.






