பிச்சைக்காரர்கள்கூட செல்போன் பயன்படுத்தும் வாய்ப்பை தி.மு.க-வின் ராஜா வழங்கியிருக்கிறார் என்றால் அது மிகையாகாது
ஆனால் 2ஜி பற்றி தவறான கருத்துக்களை மக்களிடத்தில் பலர் பரப்பிவிட்டார்கள். தமிழக மக்கள் அ.தி.மு.க-வுக்கு ஓட்டுப்போட்டதன் விளைவு தான் இன்று தாயை இழந்த அனாதையாக தமிழகம் தவிக்கிறது
கவுன்சிலர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் செய்ய வேண்டிய வேலையை மாநிலத்தின் கவர்னர் வந்து செய்துகொண்டு இருக்கிறார்.
அவரை `மக்கள் கவர்னர்’ என்று மாஃபா பாண்டியராஜன் அழைக்கும் கொடுமை இங்கு தான்நடக்கும்..

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் மீது அக்கறையற்ற அரசு இயங்கிக்கொண்டு இருக்கிறது. எத்துனை நாட்கள் அவர்கள் போராடி கொண்டிருகிறார்கள், அவர்களது பணத்தை தானே கேட்கிறார்கள்..
ஏன் இன்றும் செவி சாய்க்க மறுக்கிறார்கள்..?
லாரி வைத்திருந்த எடப்பாடிக்கும், டீக்கடை வைத்திருந்த பன்னீர்செல்வத்துக்கும் பேருந்து ஊழியர்களைப் பற்றி என்ன தெரியபோகுது..? அவர்கள் படும் இன்னல்கள் இவர்களுக்கு எங்கே தெரிய போகுது..
இவர்களை விட போக்குவரத்து ஊழியர்களுக்கே பொறுப்பு அதிகம்.. பொதுமக்கள் நடிகர்களை நம்பிக்கொண்டு இருக்கக்கூடாது.

ஆர்.கே நகர் மக்களை பிச்சைக்காரர்கள் என்று சொல்கிறார் கமல்ஹாசன்.
ஆனால், இன்றைக்கு நான் பேசி கொண்டு இருக்கும் திருப்பூர் மக்கள் ஓட்டுக்கு பணம் வாங்காதவர்கள், உழைப்பால் உயர்ந்தவர்கள். உழைப்பிற்கு பெயர் போனது திருப்பூர் நகரம்..
எனவே, தமிழகத்தில் தி.மு.க-வின் ஆட்சி அமைவதற்கு திருப்பூர் மக்களும், கோயம்புத்தூர் மக்களும் இனி வரும் தேர்தலில் தி.மு.க-வுக்கு ஓட்டு போட வேண்டும்..என கூறி தனது உரையை முடித்து கொண்டார்







