இன்றைய சினிமாவில் பெரிய திரைநட்சத்திரங்களுக்கு இணையாக சின்னத்திரை நட்சத்திரங்களுக்கும் பெரியளவில் ரசிகர்கள் உண்டு. அந்த வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ராஜா ராணி என்ற சீரியலில் செம்பருத்தி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் ஆலியா மாணசா. இவர் தொடரில் நடிப்பதற்கு முன்பு நடனம் ஆடும் கலைஞராக தான் இருந்துள்ளார்.
இவர் ஒரு தனியார் தொலைக்காட்சியில் பிரமாண்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதன் மூலம் தான் இவருக்கு ராஜா ராணி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இவருக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு உண்டு. இவர் தற்போது ஒரு பேட்டியில் அவரை பற்றிய சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அவர் ஜப்பான் மொழி பேசிவத்தில் இரண்டாவது இந்தியர் என்று அங்கீரிக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஜப்பான் மிகவும் பிடிக்குமாம்.
ஒருமுறை ஜப்பானிற்கு சென்றபோது ஆலியா அவரது சீன தோழியுடன் அங்குள்ள காவல் அதிகாரியிடம் மாட்டியுள்ளார். ஆலியாவும் அவரது சீன தோழியும் ஒன்றாக மிதிவண்டியில் சென்றுள்ளார்கள். ஜப்பான் நாட்டில் மிதிவண்டியில் ஒருவர் தான் செல்லவேண்டுமாம். இருவர் சென்றால் சட்டப்படி குற்றமாம். அதனால் காவல் அதிகாரிகள் இருவரையும் எச்சரித்து அனுப்பிவைத்துள்ளார்கள்.