தற்போதைய காலகட்டத்தில் வெள்ளித்திரை நடிகர்,நடிகைகளுக்கு இருக்கும் ரசிகர்களை விட சின்னத்திரை நடிகர்,நடிகைகளுக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர்.
அந்த வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ராஜா ராணி என்ற சீரியல் அனைவரையும் மிகவும் ஈர்த்துள்ளது.

அதிலும் குறிப்பாக அந்த சீரியலில் செம்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆலியா மானசா என்பவருக்குத்தான் மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.
அவரது குழந்தை தனமான நடிப்பினால் அனைவரையும் கவர்ந்துள்ளார் ஆலியா மானசா. இவர் சீரியல் மட்டுமல்லாமல் டான்ஸ், டப்ஸ்மேட்ச் என்று சமூக வலைதளத்தையே ஒரு கலக்கு கலக்கி வருகிறார்.
இந்த நிலையில் இவர் வெளியிட்ட ஒரு தகவல் அனைத்து ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஏனெனில் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது தோழியை சந்திப்பதற்காக ஜப்பான் சென்றிருந்தார். அப்போது அங்கு அவர், தனது தோழியுடன் மிதிவண்டியில் டபுள்ஸ் சென்றுள்ளார்.
அந்த சமயத்தில் திடீரென ஜப்பான் போலீஸ் வந்து இவர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர். காரணம் என்ன என்று கேட்கும் போதுதான் தெரிந்ததாம் அங்கு டபுள்ஸ் செல்வது குற்றமாம்.
அதன் பிறகு இவர்கள் இருவரும் காவல்துறையினரிடம் மன்னிப்பு கேட்டு விட்டு அவர்களிடமிருந்து தப்பி வந்ததாக சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் ஆலியா கூறியுள்ளார்.






