கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுற்றித்திரிந்த 35 பேருக்கு மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றம் இன்று அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
விமான நிலைய வெளியேறும் பகுதியில் காரணமின்றி நின்றிருந்தமைக்காக இவர்கள் முன்னதாக கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டது.
இதையடுத்து அவர்கள் மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகிய போது, அவர்களுக்கு தலா 1,500 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
அதேநேரம் அழைப்பாணை விடுக்கப்பட்டும் நீதிமன்றில் முன்னிலையாகாத ஐவருக்கு பிடியாணை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.







