நாமல் பதிலடி சீமானின் கேள்விக்கு!!

namal-660x330இலங்கைத் தமிழர் விவகாரத்தை சீமான் தனது சுயநல அரசியலுக்காகவே பயன்படுத்துகிறார் என நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் புதல்வருமான நாமல் ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.

நாமல் வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவின் மூலமே மேற்படி தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்திருந்தமைக்கு நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் மூலம் வாழ்த்து கூறியிருந்தார்.

இந்நிலையில் கடந்த 6ஆம் திகதி இடம்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் செவ்வி வழங்கிய சீமான் “இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல்ராஜபக்ஷ ரஜினிக்கு வாழ்த்து கூற வேண்டியதன் அவசியம் என்ன” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் அவரின் கேள்விக்கு பதில் வழங்கும் முகமாகவே நாமல் மேற்படி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.