உடன் அறி­வி­யுங்­கள், பொலிஸார் மீதான முறைப்பாடுகளை..

பொது­மக்­களை தாக்­கு­தல், அடித்­தல், துன்­பு­றுத்­தல் மற்­றும் அதி­கா­ரத்தை முறை­கே­டா­கப் பயன்­ப­டுத்­து­தல் தொடர்­பாக பொலி­ஸார் மீது ஏதே­னும் முறைப்­பா­டு­கள் இருந்­தால் உடன் வடக்கு மாகாண தேசிய பொலிஸ் ஆணைக்­கு­ழு­வுக்கு தெரி­யப்­ப­டுத்­த­லாம்.

images (1)இவ்­வாறு யாழ்ப்­பாண செய­ல­கத்­தில் இயங்­கும் தேசிய பொலிஸ் ஆணைக்­கு­ழு­வின் வடக்கு மாகா­ணப் பணிப்­பா­ளர் எஸ்.சண்­மு­க­ரட்­ணம் தெரி­வித்­தார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

பொம­து­மக்­க­ளுக்கு அர­ணாக விளங்க வேண்­டிய பொறுப்­பும் கட­மை­யும் பொலி­ஸா­ருக்கு உண்டு. பொலி­ஸார் நடந்­து­கொள்­ளும் முறை­யில் முறைப்­பா­டு­கள் இருந்­தால் யாழ்ப்­பாண செய­ல­கத்­தில் உள்ள மாகாண தேசிய பொலிஸ் ஆணைக்­கு­ழு­வில் முறை­யி­ட­லாம்.

குறிப்­பாக, முன்­வைத்த முறைப்­பா­டு­கள் மீது பொலி­ஸார் செயற்­ப­டாது இருத்­தல், பொது­மக்­களை தாக்­கு­தல் அல்­லது அடித்­தல், துன்­பு­றுத்­தல், அதி­கா­ரத்தை முறை­கே­டா­கப் பயன்­ப­டுத்­து­தல் அல்­லது துஷ்­பி­ர­யோ­கம் செய்­தல், பக்­க­சார்­பாக நடந்­து­கொள்­ளல், பார­பட்­சம் காட்­டு­தல், தடுத்து வைத்­தல், பொய்­யான குற்­றச்­சாட்­டுக்­க­ளைச் சுமத்தி காவ­லில் வைத்­தல், பெண்­கள் மற்­றும் சிறு­வர்­க­ளுக்கு எதி­ரான துன்­பு­றுத்­தல் துஷ்­பி­ர­ யோ­கங்­க­ளில் ஈடு­ப­டல், காவ­லில் இருக்­கும்­போது துன்­பு­றுத்­தல் போன்ற செயற்­பா­டு­கள் தொடர்­பாக பொலி­ஸா­ருக்கு எதி­ராக முறை­யி­ட­லாம்.

பொலிஸ் வாக­னம் அல்­லது பொலிஸ் அலு­வ­லர் தொடர்­பு­பட்ட விபத்­துக்­கள் மற்­றும் உயி­ரி­ழப்பு, பொலிஸ் நட­வ­டிக்­கை­யின் போதான துப்­பாக்கி பிர­யோ­கம் விசா­ர­ணைக்கு தேவை­யான ஆவ­ணங்­கள், பதி­வே­டு­களை தேவை­யா­ன­போது பார்­வை­யிட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும்.

எனவே மேற்­படி விட­யம் தொடர்­பில் முறை­யி­டு­வ­தற்­கும் உடன் ஆலோ­சிப்­ப­தற்­கும் எம்மை தொடர்பு கொள்­ளுங்­கள் மேல­திக விவ­ரங்­க­ளுக்கு மாவட்ட செய­ல­கத்­தின் 55ஆம் இலக்க அறை­யி­லும் 0213107722 என்ற தொலை­பேசி இலக்­கத்துடனும் தொடர்­பு­கொள்­ள­லாம் என்­றார்.