பேருந்தில் பணத்தை தவறவிட்ட நபரின் மூன்று இலட்சம் ரூபா பணத்தை உரிமையாளரிடமே ஒப்படைத்த நடத்துனரின் மனிதாபிமான செயலானது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
நானாட்டன் பகுதியை சேர்ந்த 39 வயதுடைய நபர் தனது வீட்டு கட்டுமானப் பணிக்காக மன்னாரிலுள்ள வங்கியில் இருந்து மூன்று இலட்சம் ரூபா பணத்தை எடுத்துக் கொண்டு மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி செல்லும் பேருந்தில் ஏறி பணத்துடன் சென்றுள்ளார்.
அப்போது தூக்கத்தில் வந்த அவர் தான் இறங்க வேண்டிய இடமான நானாட்டன் பகுதியில் திடீரென எழுந்து இறங்கியதில் பணம் இருந்த பையை பேருந்தில் வைத்துவிட்டு இறங்கியுள்ளார்.
இந்த நிலையில், பணம் இருந்த பையை கவனித்த நடத்துனர் சிறிது தூரம் வந்தபின் பேருந்தை நிறுத்திச் சென்று பணத்தை உரிய நபரிடம் கொடுத்துள்ளார்.
இதன்போது, பணத்தைப் பெற்ற அந்த நபர் கண்ணீர் சிந்தியபடி கை கூப்பி நன்றி தெரிவித்ததாகவும், இக்காட்சியை பார்த்த போது மிகவும் நெகிழ்ச்சியடைந்ததாகவும் சக பயணிகள் தெரிவித்துள்ளனர்.