பல்வேறு மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு!

டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு காரணமாக புகையிரத சேவை மற்றும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

201711171137060807_Smog-Keeps-Visibility-Low-in-Delhi-40-Trains-Delayed-6_SECVPFநாட்டில் நிலவும் பனிமூட்டம் காரணமாக சில காலங்களாக போக்குவரத்து துறையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.கடும் பனிமூட்டம் தீவிரமடைந்துள்ளதன் காரணமாக இன்று சனிக்கிழமை 34 புகையிரதங்கள் காலதாமதமாகவும்,15 புகையிரத சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை நிலவரப்படி அதிகபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுகின்றதாகவும் தொடர்ந்து சில காலங்களுக்கு பனிமூட்டம் அதிகரித்தே காணப்படும் என வானிலை அவதான மையம் தெரிவித்துள்ளது.மேலும் அதிகாலை வேளை போக்குவரத்துகளை கூடியளவு தவிர்த்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ள பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனடிப்படையில் தற்போது பனிமூட்டம் காரணமாக வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.