டுபாயிலிருந்து தங்கம் கடத்திய நபர் கட்டுநாயக்காவில் சிக்கினார்!

ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயிலிருந்து ஒருதொகை தங்கத்தை இலங்கைக்குக் கொண்டுவர முற்பட்ட நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய பிரதி சுங்க பணிப்பளார் ஜகத் ஒபேசேகர குறிப்பிட்டுள்ளார்.

picடுபாயில் இருந்து இலங்கைக்கு விஜயம் செய்த குறித்த நபரது பயணப் பையை ஆராய்ந்த போது அதில் குறித்த தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கமைய 5.8 கிலோகிராம் நிறையுடைய தங்கத்தின் மொத்தப் பெறுமதி இரண்டு கோடியே தொண்ணூற்றாறு இலட்சத்து எண்பத்தாறாயிரத்து அறுநூற்று தொண்ணூற்றாறு ரூபா என கணக்கிடப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய பிரதி சுங்க பணிப்பளார் ஜகத் ஒபேசேகர குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சிலாபம் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.