பிரான்ஸ் நாட்டில் கடுமையான காற்று மற்று கடல் சீற்றத்துடன் இருப்பதால் அந்நாட்டு அரசாங்கம் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சாரண்டிஸ் கடலோரப் பகுதிகளில் மேற்கு நோக்கி வீசும் புயலால் 130 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தென்மேற்கு பகுதிகள் கடுமையான சூறாவளி காற்றுக்கு முகங்கொடுக்கக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரான்ஸ் நாட்டில் இரண்டாவது பெரிய வானிலை எச்சரிக்கையான Orange Alert விடுக்கப்பட்டுள்ள நிலையில் 34 பாதுகாப்பு துறைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சூறாவளிக் காற்று வீசுவதால் பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்து அவரவர் வீட்டிலேயே இருக்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இதனால் ஏற்படும் பெரும் அசம்பாவிதங்களில் இருந்து தப்பித்து கொள்வதற்கு பொதுமக்கள் மற்றும் குறிப்பாக கடலோரப்பகுதி மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு பிரான்ஸ் நாட்டு அரசு எச்சரித்துள்ளது.
அத்துடன் 120,000 வீடுகளில் மின் இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளமையும் அதில் 90,000 வீடுகள் Pays Deal Loire பகுதியை சேர்ந்தது என்று Endis மின்சார நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.