பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை தொடரின் இறுதியாட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி, 185 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மலேசியாவில் ஆசிய அணிகளுக்கான 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இடம்பெற்றது .. இத்தொடரில் இந்தியா பாகிஸ்தான் வங்கதேசம் இலங்கை ஆப்கானிஸ்தான் மலேசியா நேபாளம் ஐக்கிய அரவு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.) உள்ளிட்ட அணிகள் பங்கேற்றன.
இதன் இறுதிப் போட்டிக்கு ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணிக்கு இக்ராம் அலி (107) சதம் அடித்து கைகொடுக்க அந்த அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 248 ஓட்டங்களை எடுத்தது.
எட்டக்கூடிய இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு முகமது தாகா (19) ஹசன் கான் (10) ஆகியோரை தவிர, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கை தாண்டவில்லை. இதையடுத்து பாகிஸ்தான் அணி 22.1 ஓவரில் 63 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து 185 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஆப்கானிஸ்தான் அணியொன்று முதற் தடவையாக ஒரு நாள் தொடர் ஒன்றின் கிண்ணத்தை கைப்பற்றியிருப்பது மகத்தான சாதனை மட்டுமல்லாது உலக கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமான திருப்பு முனையாகும்.