மெர்சல் குறித்து விஜய் ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி

தளபதி விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளிவந்த படம் மெர்சல். இப்படம் உலகம் முழுவதும் பிரமாண்ட வசூல் சாதனை செய்து வருகின்றது.

எங்கு திரும்பினாலும் மெர்சல் வசூல் சாதனை என்று தான் கூறி வருகின்றனர். இந்நிலையில் மெர்சல் படம் நாளை பிரமாண்டமாக தெலுங்கில் வெளிவரவிருந்தது.

இதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தொடங்க, தற்போது விஜய் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வெளிவந்துள்ளது.

மெர்சல் நாளை தெலுங்கில் வெளிவரவில்லையாம், ஒரு சில காரணங்களால் படம் தள்ளிச்சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

இதை தொடர்ந்து படம் எப்போது ரிலிஸ் ஆகும் என்பதை முறைப்படி நாங்களே அறிவிப்போம் என தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

NTLRG_20170530181534140618