பிரித்தானியாவில் மூத்த சகோதரியை கழுத்தறுத்து கொன்ற தங்கை: தகாத உறவால் துணீகரம்

பிரித்தானியாவில் அக்காள் கணவன் மீது கொண்ட தகாத உறவால், தமது சகோதரியையே கழுத்தறுத்து கொலை செய்த தங்கைக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் லூடன் பகுதியில் குடும்பத்துடன் குடியிருந்து வந்தவர்கள் சபா கான்(27) மற்றும் அவரது சகோதரி சைமா கான்(34) ஆகியோர்.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (22)இந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் இரவு, மாடியில் சைமாவின் நான்கு குழந்தைகளும் தூக்கத்தில் இருக்கும் வேளையில் சபா கான், ரொட்டி வெட்டும் கத்தியால் தமது சகோதரியை தாக்கியுள்ளார்.

அவரது கழுத்தை குறி வைத்து தாக்கிய சபா கான், இதில் நிலை தடுமாறி சரிந்த சைமா கானின் கைகளில் ஒன்றை வெட்டி வீசியும் ஆதிரம் அடங்காமல், அவரது உடைகளை உருவி வீசிய பின்னர் கத்தியால் 68 முறை ஆவேசத்துடன் குத்தியுள்ளார்.

இதில் சம்பவயிடத்திலேயே பரிதாபமாக சைமா கான் உயிரிழந்துள்ளார். இந்த வழக்கு விசரணை முடிவடைந்துள்ள நிலையில் சபா கான் மீதான குற்றம் சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டதால் 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

27 வயதான சபா கான் டாக்சி ஓட்டுனரான தமது சகோதரியின் கணவருடன் கடந்த 4 ஆண்டுகளாக உறவில் இருந்து வந்துள்ளார்.

சைமா கான் வேலைக்கு செல்லும் நாட்களில் அவர்களது வீட்டில் வைத்தும் பல நாட்களில் இவர்களுக்கு சொந்தமான டாக்சியில் வைத்தும் இருவரும் பாலியல் உறவிலும் ஈடுபட்டு வந்துள்ளதாக நீதிமன்ற விசாரணையில் தெரிய வந்தது.

சம்பவத்தன்று வெளியே சென்றிருந்த உறவினர்கள் வீடு திரும்பியபோது சைமா கான் ரத்த வெள்ளத்தில் கிடப்பது கண்டு அதிர்ச்சிக்குள்ளாயினர்.

ஆனால் சபா சாமர்த்தியமாக கொள்ளை சம்பவம் நடந்தது போன்றும், கொள்ளையர்களால் சைமா கான் கொல்லப்பட்டது போன்றும் ஜோடனை செய்துள்ளார்.

8 நாட்களுக்கு பின்னரே கொலைக்கு பயன்படுத்திய கத்தியை சபாவின் அறையில் இருந்து கைப்பற்றிய விசாரணை அதிகாரிகள், சந்தேகத்தின் அடிப்படையில் சபாவை கைது செய்தனர்.

பின்னர் நடந்த விசாரணையில் சைமா தகாத உறவில் ஈடுபட்டதால் தான் தாம் இந்த முடிவுக்கு வந்ததாக கூறி விசாரணையை திருப்பி விட்டார். இருப்பினும் விசாரணை அதிகாரிகளின் சாமர்த்தியத்தால் உண்மையை ஒப்புக்கொண்டார் சபா கான்.